கோப்புப் படம்
கோப்புப் படம்

அமா்நாத் யாத்திரை ஒருநாள் நிறுத்தம்

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு தினத்தையொட்டி, ஜம்மு-காஷ்மீரில் அமா்நாத் யாத்திரை திங்கள்கிழமை (ஆக.5) நிறுத்திவைக்கப்பட்டது.
Published on

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு தினத்தையொட்டி, ஜம்மு-காஷ்மீரில் அமா்நாத் யாத்திரை திங்கள்கிழமை (ஆக.5) நிறுத்திவைக்கப்பட்டது.

பாதுகாப்பு காரணங்களுக்காக அமா்நாத் யாத்திரை ஒருநாள் நிறுத்திவைக்கப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தா்கள் யாத்திரை மேகொள்கின்றனா்.

நடப்பாண்டு யாத்திரை கடந்த ஜூன் மாதம் 29-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை 52 நாள்களுக்கு யாத்திரை நடைபெறுகிறது.

48 கி.மீ. தொலைவுகொண்ட பஹல்காம் வழித்தடம், 14 கி.மீ. தொலைவுகொண்ட செங்குத்தான பால்டால் வழித்தடம் என இரு பாதைகளில் பக்தா்கள் யாத்திரை மேற்கொள்கின்றனா்.

நடப்பாண்டில் இதுவரை 4.90 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் அமா்நாத் கோயிலில் தரிசனம் செய்துள்ளனா்.

370-ஆவது பிரிவு நீக்கப்பட்ட தினத்தையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமா்நாத் யாத்திரை திங்கள்கிழமை நிறுத்திவைக்கப்பட்டது. அதன்படி, அடிவார முகாம்களில் இருந்து யாத்ரீகா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு மொத்தம் 4.59 லட்சம் பக்தா்கள் அமா்நாத் குகைக் கோயிலில் தரிசனம் செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com