சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு: மெகபூபா முப்திக்கு வீட்டுச்சிறை!

இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைவதால் பாதுகாப்புக் காரணங்களுக்காக எனக் கூறி முன்னாள் முதல்வர் மெகபூபா முப்திக்கு வீட்டுச்சிறை.
மெகபூபா முப்தி
மெகபூபா முப்தி
Published on
Updated on
1 min read

இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைதால் ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவருமான மெகபூபா முப்தி வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தன்னை வீட்டுச் சிறையில் அடைத்து, மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) அலுவலகத்தைப் பாதுகாப்புப் படையினர் பூட்டி வைத்ததாக மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, அல்தாஃப் புகாரி தலைமை வகிக்கும் அப்னி கட்சி அலுவலகமும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பூட்டப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெகபூபா முப்தி
சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு: ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு!

ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் செய்தித் தொடர்பாளர் தன்வீர் சாதிக் தனது எக்ஸ் தளப் பதிவில் தன்னையும் காவல்துறையினர் வீட்டுச் சிறையில் அடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“என்னை வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். இது தேவையற்றது. நான் வேலையாக வெளியே செல்ல வேண்டியுள்ளது. ஆனால், காவல்துறையினர் வீட்டின் முன் நின்றுகொண்டு என்னை வெளியே செல்ல விடாமல் தடுக்கின்றனர். இது சட்டவிரோதமானது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், வீட்டின் வெளியே காவலர் நிற்பதை புகைப்படம் எடுத்துப் பகிர்ந்துள்ள அவர், “ஆகஸ்ட் 5 அரசியலமைப்பிற்கு எதிராக சட்டவிரோதமான நாள். 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு பாஜக துரோகம் செய்தது. அரசியலமைப்பைப் புறக்கணித்து ஜம்மு-காஷ்மீருடனான தார்மீக, நேர்மையை பாஜக குறைமதிப்பிற்கு உட்படுத்தியது” என தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சித் தலைவர் சஜாத் கனி லோன் கூறுகையில், “ஆகஸ்ட் 5 என்பது காஷ்மீர் மக்களின் முழு அதிகாரம் பறிக்கப்பட்டதை மிக மோசமாக என்றும் நினைவூட்டும். ஐந்து ஆண்டுகளாக இங்கு மக்கள் தேர்ந்தெடுத்த சட்டப்பேரவை இல்லை.

மேலும் உள்ளூர் மக்கள் தங்களது சொந்த விவகாரங்களில் கூட தலையிட முடியவில்லை. ஜம்மு-காஷ்மீரை இவ்வாறு அவமானகர நிலைக்கு கொண்டு வந்ததைக் கேள்வி கேட்கும் சக்திவாய்ந்த குரல்கள் நாட்டில் போதுமான அளவில் இல்லை என்பது வருத்தகரமாக உள்ளது” என தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com