
இந்தியா வந்த வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான அஜித் தோவல் சந்தித்தார்.
வங்கதேச தலைநகர் டாக்காவின் தற்போதைய நிலவரம் குறித்து அவர்கள் விவாதித்ததாகத் தெரிகிறது.
வங்கதேச விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் பாட்னா வாழியாக உத்தரப்பிரதேசம் - பிகார் எல்லைப் பகுதிக்கு வந்தடைந்து, பின்னர் காஸியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கினர்.
அங்கு சென்று அஜித் தோவல் ஷேக் ஹசீனாவை சந்தித்தார். அப்போது டாக்காவின் தற்போதைய நிலவரம், விளைவுகல் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
ஹேக் ஹசீனா இந்தியாவுக்கு வந்ததைத் தொடர்ந்து கிழக்கு எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமானப் படை மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டாக்காவில் இருந்து சி - 130 ரக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இந்தியா வந்த அவர், காஸியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்திற்கு வந்து சேர்ந்தார்.
அங்கிருந்து அவர் திட்டமிட்டுள்ள இடத்துக்கு செல்ல விமானப் படை, மத்திய பாதுகாப்புப் படைகள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வந்ததை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தார்.
வங்கதேசத்தில் போராட்டக்காரர்கள் தீவிரமாக இருந்ததாலும் கலவரம் பெரிதானதாலும், ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு வெளிநாடுக்குத் தப்பினார். ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இந்தியா வந்த அவர், இங்கிருந்து லண்டன் செல்லத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.