
முண்டக்கை: இயற்கையின் ரகசியங்களை பறவைகளும் விலங்குகளும் அறிந்துகொள்ளும் திறன்பெற்றிருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில், வயநாடு மாவட்டம் சூரல்மலையில் வளர்ப்புக் கிளி கொடுத்த எச்சரிக்கையால் பல குடும்பங்கள் தப்பிய செய்தி வெளியாகியிருக்கிறது.
வினோத் என்பவர் தனது வீட்டில் வளர்த்து வந்த கின்கினி என்ற கிளிக்கு வரப்போகும் நிலச்சரிவு குறித்து தெரிந்திருக்கிறது. கிளி வினோத்துக்கு எச்சரிக்கை கொடுத்ததன் விளைவாக அவர்களது குடும்பம் மட்டுமல்லாமல், அவரது நண்பர்கள், அண்டை வீட்டாரும் பாதுகாப்பாக வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
வினோத் மற்றும் அவரது குடும்பத்தினர், காலணி சாலையில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு நிலச்சரிவுக்கு முந்தைய நாள் சென்றுள்ளனர். அவர்களுடன் கின்கினியையும் அழைத்துச் சென்றுள்ளனர். மறுநாள், அது கின்கினி தனது கூட்டுக்குள் பயங்கரமாகக் கத்தத்தொடங்கியது. கூட்டுக்குள் அங்குமிங்கும் ஓடியதால் அதன் இறகுகள் கூட பிய்ந்துவிட்டன. இதனைப் பார்த்த வினோத், ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்துகொண்டார். சூரல்மலைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நான் எனது அண்டை வீட்டினருக்கும் தகவல் கொடுத்தேன். அனைவருமே உறக்கத்தில் இருந்தனர். ஆனால் எனது போனை எடுத்து பேசி வெளியே நடப்பதைப் பார்த்தனர்.
மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதைப் பார்த்த அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டனர்.
பிறகு செவ்வாய் அதிகாலை நிலச்சரிவு நேரிட்டு பல கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. வினோத் மற்றும் ஜிஜின் வீடுகள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. தற்போது வினோத் மற்றும் அவரது அண்டை வீட்டார் தற்போது மேப்பாடியில் உள்ள நிவாரண முகாமில் தங்கியிருக்கிறார்கள்.
கின்கினி கொடுத்த எச்சரிக்கையால்தான் தாங்கள் உயிரோடு இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.