சுவேந்து அதிகாரி
சுவேந்து அதிகாரி

1 கோடி ஹிந்து அகதிகள் மேற்கு வங்கத்துக்குள் நுழைய வாய்ப்பு: பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி

வங்கதேசத்திலிருந்து 1 கோடி ஹிந்து அகதிகள் மேற்கு வங்கத்துக்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக பாஜக மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
Published on

வங்கதேசத்தில் நிலவும் மோசமான அரசியல் சூழ்நிலையால் அடுத்த சில நாள்களுக்குள் வங்கதேசத்திலி இருந்து மேற்கு வங்கத்துக்குள் ஒரு கோடி ஹிந்துக்கள் நுழைய வாய்ப்பிருப்பதாக பாஜக மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் செய்தியாளர்களுடன் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, “ஒரு கோடி ஹிந்துக்கள் வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்கத்திற்கு வர இருப்பதால் இங்குள்ள மக்கள் அதற்குத் தயாராக இருக்கவேண்டும். வங்கதேசத்தில் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். ரங்பூர் நகர கவுன்சிலர் ஹரதன் நாயக் கொலை செய்யப்பட்டார்.

வங்கதேசத்தில் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய மக்கள்
வங்கதேசத்தில் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய மக்கள்

வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் பகுதியில் 13 போலீஸார் கொல்லப்பட்டனர். அதில் 9 பேர் ஹிந்துக்கள். அங்குள்ள நவகாளி பகுதியில் ஹிந்துக்களின் குடியிருப்புகள் தீவைத்து எரிக்கப்படுகின்றன” என்று கூறினார்.

சுவேந்து அதிகாரி
பிரதமர் மோடியால் மட்டுமே வங்கதேச சிறுபான்மையினரைக் காப்பாற்ற முடியும்: பாஜக எம்.பி.

மேலும், “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் மத ரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளாகும் அண்டை நாட்டு மக்களுக்கு நாம் அடைக்கலம் கொடுக்கலாம். இதனை கவர்னர் சி.வி.போஸ் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் மத்திய அரசிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

வங்கதேசத்தில் நடக்கும் பிரச்னைகளுக்கு அடுத்த 3 நாள்களில் மாறிவிடாது. வங்கதேசம் அடிப்படைவாத சக்திகளின் கட்டுப்பாட்டின் கீழ் வரும். ஒரு கோடி ஹிந்துக்களுக்கு அடைக்கலம் கொடுக்க மனரீதியாகத் தயாராக வேண்டும். நான் அதற்குத் தயாராக இருக்கிறேன்.

கடந்த 1971-ம் ஆண்டில் செய்தது போல மேற்கு வங்க மக்கள் ஹிந்து அகதிகளுக்கு தற்போது அடைக்கலம் கொடுக்க வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று அதிகாரி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com