சாலையே இல்லை! வயலுக்கு நடுவே பாலம்! பிகாரில்...

சாலைகளே இல்லாத வயலுக்கு நடுவே கட்டப்பட்டுள்ள பாலம்.
BIhar Bridge
அராரியா மாவட்டத்தில் வயலுக்கு நடுவே கட்டப்பட்டுள்ள பாலம்.TNIE
Published on
Updated on
1 min read

பிகார் மாநில சாலை கட்டுமானத் துறையால் சாலைகளே இல்லாத வயலுக்கு நடுவே பாலம் கட்டப்பட்டுள்ளது.

அராரியா மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள இந்த வினோதமான பாலம் தொடர்பான செய்தியை அறிந்து திகைத்து போன மாவட்ட ஆட்சியர் இனாயத் கான், பாலம் குறித்து விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து இனாயத் கான் கூறுகையில், “இந்த பாலம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த பாலம் கட்டப்பட்டதாகவும், வயலுக்கு நடுவே உள்ள பாலத்தால் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் பர்மானந்தபூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாலைகளே இல்லாமல் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தால் விவசாய நிலங்களுக்கு இரண்டு கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பாலத்துக்கு இணைப்பு சாலைகளை உருவாக்க சம்பந்தப்பட்ட துறையிடம் கோரிக்கை முன்வைப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

BIhar Bridge
தமிழ்நாட்டில்தான் அதிக அளவு இதய மாற்று அறுவைச் சிகிச்சை!

இதுகுறித்து அராரியா மாவட்டத்தின் சாலை கட்டுமானத் துறையின் உதவிப் பொறியாளர் மனோஜ் குமார் கூறியதாவது:

“இது பாலம் அல்ல, நீர்நிலைகளை பராமரிப்பதற்காக அமைக்கப்பட்ட சதுர பாலம்(பாக்ஸ் கல்வர்ட்). முதலமைச்சரின் கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் சதுர பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் இருபுறங்களிலும் 3.2 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சாலை அமைக்கப்பட்டால் பர்மாந்தபுரம் லட்சுமிஷ்தான் மற்றும் கோபாரி இடையே இணைப்பு சாலை ஏற்படும். இதன்மூலம் இரு கிராமங்களில் வசிக்கும் 1,500 பேர் பயனடைவார்கள். இந்த சாலை அமைக்க ரூ. 3 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சாலை அமைக்கும் திட்டத்தில் 200 மீட்டர் தனியார் நிலம் உள்ளதால் பணிகள் முடிவடையாமல் உள்ளது. அதன் உரிமையாளரிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பிரச்னை முடிந்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். விதிமுறையின் படியே சதுர பாலம் கட்டப்பட்டுள்ளது” என்றார்.

பிகார் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 13-க்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில், இந்த பிரச்னை எழுந்துள்ளது. கட்டுமானப் பொருள்களுக்கு தரமற்ற பொருள்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அராரியா மாவட்டத்தில் ரூ. 12 கோடி செலவில் கட்டப்பட்ட 183 மீட்டர் நீளமுள்ள பாலம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து விசாரணை ஏற்கெனவே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com