பாரீஸ் ஒலிம்பிக்: நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட அன்டிம் பங்கால்! வினேஷ் வாய்ப்பை பறித்தவர்!!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியிலிருந்து அன்டிம் பங்கால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
அன்டிம் பங்கால் தோல்வி
அன்டிம் பங்கால் தோல்வி
Published on
Updated on
1 min read

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீராங்கனை அன்டிம் பங்கால் மற்றும் அவரது குழுவினர் ஒட்டுமொத்தமாக பாரீஸிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்திய மல்யுத்த வீராங்கனை அன்டிம் பங்கால், மகளிருக்கான மல்யுத்தப் போட்டியின் 53 கிலோ எடைப்பிரிவில் தோல்வியடைந்த நிலையில், அடையாள அட்டையை முறைகேடாகப் பயன்படுத்தியக் குற்றச்சாட்டில், ஒலிம்பிக் போட்டியிலிருந்தே வெளியேற்றப்பட்டுள்ளார்.

மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் களம் கண்ட அன்டிம் பங்கால், முதல் சுற்றிலேயே 0- 10 என்ற கணக்கில் துருக்கியின் யெத்கில் ஜெய்னெப்பிடம் தோல்வி கண்டார்.

எனினும் அவருக்கு ரெபிசேஜ் சுற்று வாய்ப்பு கிடைக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், அவரை வீழ்த்திய ஜெய்னெப் தனது காலிறுதியிலேயே தோல்வி கண்டதால், அன்டிமுக்கு அந்த வாய்ப்பும் பறிபோனது. இதனால், வினேஷ் போகத்தின் வாய்ப்பை தட்டிப்பறித்து ஒலிம்பிக் போட்டியின் 53 கிலோ எடைப்பிரிவில் நுழைந்த அன்டிம் பங்கால் பதக்கம் இல்லாமல் நாடு திரும்ப இருந்த நிலையில்தான் அடையாள அட்டையை முறைகேடாகப் பயன்படுத்தியக் குற்றச்சாட்டின் கீழ் ஒலிம்பிக் அமைப்பினரால், வெளியேற்றப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது.

அன்டிம் பங்கால் தோல்வி
53 கேட்டும் 50 கிலோ பிரிவில் போட்டியிட நிர்பந்திக்கப்பட்ட வினேஷ் போகத்?

இந்திய மல்யுத்த வீராங்கனை என்று தனது அடையாள அட்டையை தங்கையிடம் கொடுத்து, முறைகேடாக, ஒலிம்பிக் கிராமத்துக்குள் நுழைய முயன்றதாக அங்கிருந்த காவல்நிலையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், ஒலிம்பிக் போட்டியிலிருந்து அன்டிம் பங்கால் வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியிலிருந்தே வெளியேற்றப்பட்டதால், அன்டிம் பங்காலும், அவரது சகோதரியும் வியாழக்கிழமையே இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இது குறித்து இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மல்யுத்த வீராங்கனை அன்டிம் மற்றும் அவரது உதவியாளர்கள் அனைவர் மீதும் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பிரெஞ்ச் அதிகாரிகள் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்புக்கு சம்மன் அனுப்பியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அன்டிம்மின் உதவியாளர்களாக - பயிற்சியாளர் பகத் சிங் மற்றும் விகாஸ் ஆகியோர், மற்றொரு காவல்துறை வழக்கை சந்தித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அங்கிருந்து வரும் தகவலின்படி, இருவரும், ஒலிம்பிக் கிராமத்திலிருந்து வாடகைக் காரைப் பிடித்து புதன்கிழமை மாலை தாங்கள் தங்கியிருக்கும் விடுதிக்குச் சென்றதாகவும், அங்குக் சென்ற பிறகு அவர்கள் காருக்குரிய வாடகையைக் கொடுக்க மறுத்து, கார் ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துவிட்டு, பணம் கொடுக்காமலேயே சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கார் ஓட்டுநர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அன்டிம் பங்கால், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகத்தான், வினேஷ் போகத், 50 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட நிர்பந்திக்கப்பட்டுள்ளார். ஆனால், சர்வதேச வீராங்கனைகளை எல்லாம் தோற்கடித்து இறுதிக்கு முன்னேறியும் கூட, எடை அதிகம் இருந்தததால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு இன்று ஒட்டுமொத்த இந்தியர்களின் மனதையும் வென்று நாடு திரும்பவிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com