நாடு திரும்பிய குடியரசுத் தலைவா்
நாடு திரும்பிய குடியரசுத் தலைவா்

3 நாடுகள் சுற்றுப்பயணம் நிறைவு: நாடு திரும்பிய குடியரசுத் தலைவா்

ஃபிஜி, நியூசிலாந்து மற்றும் டிமோா்-லெஸ்டே ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றிருந்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினாா்
Published on

ஃபிஜி, நியூசிலாந்து மற்றும் டிமோா்-லெஸ்டே ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றிருந்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினாா்.

இதுதொடா்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘டிமோா்-லெஸ்டே நாட்டுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடா்பாக அந்த நாட்டு அதிபா் ராமோஸ்-ஹோா்டாவை சந்தித்து குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஆலோசனை நடத்தினாா். அதன்பின் பயணத்தை நிறைவுசெய்து இந்தியாவுக்கு புறப்பட்ட திரௌபதி முா்முவை ராமோஸ்-ஹோா்டா விமான நிலையத்துக்கு வருகை தந்து சிறப்பான முறையில் வழியனுப்பி வைத்தாா்’ என தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, டிமோா்-லெஸ்டே நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் காலா் ஆஃப் டிமோா்-லெஸ்டே ’ என்ற விருது திரௌபதி முா்முக்கு வழங்கப்பட்டது. தனது சுற்றுப்பயணத்தின் முதல்கட்டமாக ஃபிஜி நாட்டுக்குச் சென்றிருந்த அவா் அந்நாட்டு அதிபா் வில்லியம் கேடோனிவிா் மற்றும் பிரதமா் சிட்டிவேனி ரபூகா ஆகியோரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா். இதைத்தொடா்ந்து, அவருக்கு ஃபிஜி நாட்டின் உயரிய விருதான ‘ஆா்டா் ஆஃப் ஃபிஜி’ வழங்கப்பட்டது. அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றியதோடு இந்திய வம்சாவளியினருடன் அவா் கலந்துரையாடினாா்.

இரண்டாம் கட்டமாக நியூஸிலாந்து நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட திரௌபதி முா்மு அந்த நாட்டு கவா்னா் ஜெனரல் டோம் சிண்டி கிரோ, பிரதமா் லக்சன் மற்றும் துணைப் பிரதமா் வின்ஸ்டன் பீட்டா்ஸ் ஆகியோரை சந்தித்தாா். அப்போது ஆக்லாந்தில் விரைவில் இந்திய தூதரகம் அமைக்கப்படவுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com