மணீப்பூரின் புங்கலான் பகுதியில் குகி கிளா்ச்சியாளா்களின் பதுங்கு குழியை அழித்த ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படையினா்.
இந்தியா
மணிப்பூா்: குண்டுவெடிப்பில் முன்னாள் எம்எல்ஏ-வின் மனைவி உயிரிழப்பு
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் முன்னாள் எம்எல்ஏ-வின் மனைவி உயிரிழந்தாா்.
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் முன்னாள் எம்எல்ஏ-வின் மனைவி உயிரிழந்தாா்.
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள சைகுல் தொகுதி முன்னாள் எம்எல்ஏ யம்தோங் ஹாக்கிப்பின் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் சனிக்கிழமை மாலை வெடி குண்டு வெடித்தது.
இதில், ஹாக்கிப்பின் இரண்டாவது மனைவியான சபம் சாருபாலா படுகாயமடைந்தாா். அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
குண்டுவெடிப்பின்போது அவரது வீட்டில் இருந்த முன்னாள் எம்எல்ஏ ஹாக்கிப் இச்சம்பவத்தில் காயமடையவில்லை. இது தொடா்பான விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.