
கலால் கொள்கை முறைகேடு தொடர்பான ஊழல் வழக்கில் சிபிஐ கைது செய்தது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கலால் கொள்கை வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதல்வருக்கு பணமோசடி வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஜூன் 20ம் தேதி ஜாமீன் வழங்கியது. ஆனால், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
ஜூலை 12ஆம் தேதி, பணமோசடி வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து சிபிஐ அவரை கைது செய்தது.
சிபிஐ பதிவு செய்த ஊழல் வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் கேஜரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இதனைதொடர்ந்து, இந்த வழக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நியாயமான எந்தவொரு காரணமும் இல்லாமல் சிபிஐ கைது செய்ததாகக் கூற முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில் சிபிஐ கைது நடவடிக்கையை ரத்து செய்ய மறுத்த தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கேஜரிவால் இன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் சிரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஆம் ஆத்மியின் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.