கண்கள் பார்த்துப் பேசாத நீரஜ் - மனு பாக்கர்! வைரலாகும் விடியோ!

துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கரையும் அவரின் தாயாரையும் சந்தித்தார் நீரஜ் சோப்ரா.
மனு பாக்கருடன் பேசும் நீரஜ் சோப்ரா / நீரஜ் சோப்ராவிடம் பேசும் மனு பாக்கரின் தாயார்
மனு பாக்கருடன் பேசும் நீரஜ் சோப்ரா / நீரஜ் சோப்ராவிடம் பேசும் மனு பாக்கரின் தாயார்படம்: எக்ஸ்
Published on
Updated on
2 min read

இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கரையும் அவரின் தாயாரையும் சந்தித்துப் பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கமும், மனு பாக்கர் இரு வெண்கலப் பதக்கங்களையும் வென்றிருந்தனர்.

2024 ஒலிம்பிக் தொடரில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர், 221.7 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.

மேலும், ஒலிம்பிக்கில் முதல்முறை சேர்க்கப்பட்ட கலப்பு இரட்டையர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சரப்ஜோத் சிங் உடன் களமிறங்கிய மனு பாக்கர், வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் நடப்பு ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.

ஒலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் (ஆக. 11) நிறைவடைந்த நிலையில், நிறைவு விழாவில் ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ் உடன் சேர்ந்து இந்தியாவின் கொடியை மனு பாக்கர் ஏந்தினார்.

ஒலிம்பிக் போட்டிகளை முடித்துக்கொண்டு வீரர்கள் இந்தியாவுக்கு திரும்புவதற்கு முன்பு, பாரீஸில் உள்ள இந்தியா இல்லத்தில் சந்தித்துக்கொண்டனர். அப்போது நீரஜ் சோப்ரா, மனு பாக்கரையும் அவரின் தாயாரையும் சந்தித்துப் பேசினார்.

அவர்கள் பேசிக்கொண்ட விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதில் மனு பாக்கரும் நீரஜ் சோப்ராவும் பேசிக்கொள்ளும்போது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல், வெட்கத்துடன் பேசுவதைப் போன்று உள்ளது.

இந்த விடியோவைப் பகிர்ந்தவர்களும் இதனைக் குறிப்பிட்டு, எதிர்கால விளையாட்டுத் துறை தம்பதிகள் - இந்தியாவில் எதிர்பாலினத்தைச் சேர்ந்தவரிடம் பேசும்போது இவ்வாறு இருப்பது இயல்பு - என்பன போன்ற பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

மற்றொரு விடியோவில், மனு பாக்கரின் தாயார், நீரஜ் சோப்ராவின் கரங்களைப் பற்றி தனது தலையில் வைத்துக்கொள்வதைப் போன்று உள்ளது. அவர் எது குறித்தோ அவரிடம் உறுதி கேட்பதாக கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

நீரஜ் சோப்ராவிடம் பேசும் மனு பாக்கரின் தாயார்
நீரஜ் சோப்ராவிடம் பேசும் மனு பாக்கரின் தாயார்படம் : எக்ஸ்

பதக்கங்களை வென்ற பின்னரும், ஒலிம்பிக் போட்டிகள் நிறைவைடந்த பின்னரும் நீரஜ் சோப்ராவும், மனு பாக்கரும் சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்பட்டு வரும் விளையாட்டுத் துறை பிரபலங்களாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com