எக்ஸ் கணக்கை செபி நிறுத்தி வைத்திருப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி

நெருக்கடியின் போது மக்களுடனான அணுகலை நிறுத்துவது முதிர்ந்த அமைப்புக்கான அடையாளம் அல்ல என்று விமர்சனம்.
SEBI
செபி எக்ஸ் கணக்குSEBI
Published on
Updated on
1 min read

பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம்(செபி) தனது எக்ஸ் கணக்கை நிறுத்தி வைத்திருப்பதற்கான குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில், செபியின் தலைவா் மாதவி புரி புச் பங்குகளை வைத்திருந்ததை ஹிண்டன்பர்க் நிறுவனம் சனிக்கிழமை கட்டுரை வெளியிட்டது.

இந்த கட்டுரை வெளியான சில மணிநேரங்களில், செபி தனது எக்ஸ் கணக்கை யாரும் அணுகாத வகையில் நிறுத்தி வைத்துள்ளது. இதன்மூலம், செபி எக்ஸ் கணக்கை டேக் செய்து எந்த பதிவும் வெளியிட முடியாது.

SEBI
அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளும் சரிவுடன் தொடக்கம்!

இந்த நிலையில், செபியின் எக்ஸ் கணக்கு நிறுத்தி வைத்திருப்பது குறித்து ஜெய்ராம் ரமேஷ் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”செபியின் எக்ஸ் கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் யாரும் அந்த கணக்கை அணுக முடியாது. சில நாள்கள் அந்த கணக்கு நிறுத்தி வைத்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செபி தலைவர் குறித்த அறிக்கை வெளியாகியுள்ள இந்த நேரத்தில் எக்ஸ் கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது புதிராக உள்ளது.

பல மாதங்களுக்கு முன்பு வெளிவந்த மோதானியின் ஊழல் தற்போது மீண்டும் எழுந்துள்ளது. இத்தகைய சூழலில் செபியின் செயலற்ற தன்மை ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

செபி குறித்து சில கேள்விகள் எழுகின்றன:

1. எக்ஸ் கணக்கு ஏன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது? மோதானி ஊழலில் செபியின் தலைவரை குற்றம்சாட்டக்கூடிய கடந்தகால பதிவுகள் மற்றும் செய்தி வெளியீடுகளை அமைதியாக நீக்குகிறதா என்ற கேள்வி எழுகிறது.

2. இந்த தளம் தேசத்தின் சொத்து, பொதுமக்கள் அணுகுவதை அதிகாரிகள் நிறுத்தி வைக்கக்கூடாது.

3. நெருக்கடியான சூழலில், மக்களுடனான அணுகலை நிறுத்தி வைப்பது முதிர்ந்த சுதந்திரமான சந்தை ஒழுங்காற்று அமைப்புக்கான அடையாளம் அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

SEBI
அதானி முறைகேடு நிறுவனங்களில் செபி தலைவருக்குப் பங்கு: ஹிண்டன்பா்க் அறிக்கையில் குற்றச்சாட்டு

இதற்கிடையே செபி தலைவா் மாதபியுடன் எங்களுக்கும் எந்த வணிக உறவும் இல்லை என்று அதானி நிறுவனமும், ஹிண்டன்பா்க் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றது என மாதபியும் மறுப்பு தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com