
மேற்கு வங்க அரசு திறமையற்றது என்று மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.
தில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநில தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆதிர் ரஞ்சனிடம், கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மாணவியின் கொலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது ஆதிர் ரஞ்சன் பேசியதாவது:
“மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டத்துக்குரியது. இந்த விவகாரத்தில் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆனால் இன்னும் தடுமாற்றத்தில் உள்ளது.
சட்டம் மற்றும் ஒழுங்கு மாநிலத்தில் மோசமான நிலையில் உள்ளது. மாநில அரசு திறமையற்று உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு உதவ விரும்புகிறது” எனத் தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர் ஜி கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய முதுநிலை மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவ ஒட்டுமொத்த உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியது.
கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில், வியாழக்கிழமை இரவுப் பணிக்கு வந்த பெண் மருத்துவர், வெள்ளிக்கிழமை காலை கருத்தரங்கு அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
முதற்கட்டமாக, மருத்துவ மாணவியின் உடல்கூறாய்வில், மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் வெடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.