
அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள வண்ண விளக்குகள் திருடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேசம், வாரணாசியில் உள்ள அயோத்தி ராமர் திருக்கோயிலில் கடந்த ஜனவரி 22ல் ராமர் சிலைப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் அயோத்தி ராமரை வழிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அயோத்தியில் உயர் பாதுகாப்புப் பகுதியில் அமைந்துள்ள ராமர் கோயிலின் பாதையில் நிறுவப்பட்ட 36 புரொஜெக்டர் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லும் ராம பாதையில் 6,400 மூங்கில் விளக்குகளும், பக்தி பாதையில் 96 புரோஜெக்டர் விளக்குகளும் நிறுவப்பட்டிருந்தன.
கடந்த மே 9-ம் தேதி ஆய்வு மேற்கொண்டபோது சில விளக்குகள் காணாமல்போனது தெரியவந்தது. இதுவரை ரூ.50 லட்சம் மதிப்பிலான விளக்குகள் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஆகஸ்ட் 9-ம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விளக்குகளை நிறுவிய யாஷ் எண்டர்பிரைசஸ் மற்றும் கிருஷ்ணா ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி இந்த புகாரைப் பதிவு செய்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.