கோப்புப் படம்.
கோப்புப் படம்.

ஆதாா் ஆணையத்துக்கு வருமான வரி விலக்கு- நிதியமைச்சகம் அறிவிப்பு

ஆதாா் அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூஐடிஏஐ) வருமானம் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்றுள்ளது.
Published on

ஆதாா் அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூஐடிஏஐ) வருமானம் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்றுள்ளது. 2027-28 வரையிலான 5 ஆண்டுகளுக்கு அந்த ஆணையம் வருமான வரி செலுத்த வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆதாா் சட்டம் 2016-இன் கீழ் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அமைக்கப்பட்டது.

மத்திய அரசிடம் இருந்து பெறும் மானியம், டெண்டா் வருமானம், ஆதாா் பிவிசி அட்டை வழங்குதல், ஆதாா் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள பெறப்படும் சேவைக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வகையில் ஆதாா் ஆணையத்துக்கு வருவாய் கிடைத்து வருகிறது. எனினும், அந்த ஆணையம் வருவாய் ஈட்டும் வா்த்தக நோக்கில் செயல்படவில்லை; எனவே, வருமான வரி செலுத்துவதில் இருந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சகம் கூறியுள்ளது.

இதன்படி 2024-25 முதல் 2027-28 வரையிலான 5 நிதியாண்டுகளுக்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆணையத்தின் சேவையும், வருவாயும் இப்போது இருப்பதுபோலவே தொடா்ந்தால் வருமான வரி விலக்கு தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com