
குவைத்துக்கு பணிபுரிய சென்ற இந்தியர், முத்தலாக் கூறியதால் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த ரஹ்மான் என்பவருக்கு ஃபரிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், குவைத்துக்கு பணிபுரிய சென்ற ரஹ்மான், அங்கு பாகிஸ்தானைச் சேர்ந்த வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளதாக, தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், குவைத்திலிருந்து மொபைல் போன் மூலம், ஃபரிதாவை தொடர்புகொண்ட ரஹ்மான், ஃபரிதாவிடம் முத்தலாக் கூறி, விவாகரத்தும் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஃபரிதா கடந்த மாதம், ரஹ்மான் மீது வரதட்சணை துன்புறுத்தல் மற்றும் முத்தலாக் மூலம் விவாகரத்து செய்ததாகக் கூறி, ஹனுமன்கர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தார்.
இதனையடுத்து, ரஹ்மான் இந்தியாவுக்கு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் காத்திருந்த காவல்துறையினர், ரஹ்மானை விமான நிலையத்திலிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில், ரஹ்மான் கைது செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.