தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு! சிறந்த நடிகர் ரிஷப் ஷெட்டி, சிறந்த நடிகை நித்யா மேனன்

சிறந்த படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு! சிறந்த நடிகர் ரிஷப் ஷெட்டி, சிறந்த நடிகை நித்யா மேனன்
Published on
Updated on
2 min read

70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சிறந்த தமிழ்த் திரைப்படமாக தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன்-1 தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2023 இல் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இதற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

தற்போது சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு, சிறந்த படம், சிறந்த பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு என 4 பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக ஏ.ஆர். ரகுமானுக்கு சிறந்த இசை அமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஒளிப்பதிவுக்கு ரவி வர்மனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரகுமான்
ஏ.ஆர். ரகுமான்

சிறந்த மலையாளத் திரைப்படமாக சவுதி வெள்ளக்காவும், சிறந்த கன்னடத் திரைப்படமாக கேஜிஎஃப்-2 ஆம் பாகமும், சிறந்த தெலுங்கு திரைப்படமாக கார்த்திகேயா-2 ஆம் பாகமும், சிறந்த ஹிந்தி திரைப்படமாக குல்மோஹரும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சிறந்த நடிகையாக, திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனனும், இந்தி படமான குட்ச் எக்ஸ்பிரஸ் படத்தின் மான்ஸி பரீக்குக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷுடன் நித்தியா மேனன் | ஜானி மாஸ்டர்
தனுஷுடன் நித்தியா மேனன் | ஜானி மாஸ்டர்

சிறந்த நடன காட்சிகளுக்காக திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா பெண்ணே..பெண்ணே என்ற பாடலுக்காக ஜானி, சதீஷ் கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்பறிவ்
அன்பறிவ்

சிறந்த சண்டைக் காட்சிகளுக்கு கேஜிஎஃப் 2 படத்திற்காக அன்பறிவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த அளவில் சிறந்த திரைப்படமாக மலையாளத்தில் வெளியான 'ஆட்டம்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆட்டம் திரைப்படம்
ஆட்டம் திரைப்படம்

சிறந்த நடிகருக்கான விருதுக்கு கன்னட மொழியில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற காந்தாரா படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டியும், 12th பெயில் படத்தில் நடித்த விக்ராந்த் மாசேவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த பாடகியாக சௌதி வெள்ளக்கா படத்திற்காக பாம்பே ஜெயஸ்ரீக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு
DOC
70 ஆவது தேசிய விருதுகள் விவரம்.docx
Download

சிறந்த பின்னணி பாடகராக, ஹிந்தி படமான பிரம்மாஸ்திரா படத்தின் இசையமைப்பாளர் அர்ஜித் சிங்குக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இசைக்காக, ஹிந்திப் படமான பிரம்மாஸ்திரா படத்தின் பிரிதமுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இசை வடிவமைப்பாளருக்காக, தமிழ்ப் படமான பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தின் இசை வடிவமைப்பாளர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த ஒப்பனைக்காக, வங்கமொழி படமான அபராஜிதோ படத்தின் ஒப்பனைக் கலைஞர் சோம்நாத் குண்டுவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com