ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி டி-3!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெள்ளிக்கிழமை காலை எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி டி-3!
Published on
Updated on
1 min read

புவிக் கண்காணிப்புக்கான இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று(ஆக. 16) காலை விண்ணில் ஏவப்பட்டது.

இதற்கான 6 மணி நேர கவுன்ட்டவுன் அதிகாலை 3 மணியளவில் தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சாா்பில் புவிக் கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஒஎஸ்-08 எனும் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டது.

இ.ஓ.எஸ் செயற்கைக் கோள் பேரிடர் காலங்களில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் புவிக் கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஒஎஸ்-08 எனும் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டது. செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடையும், ஒரு ஆண்டு ஆயுட்காலத்துடனும் வடிவமைக்கப்பட்டது.

இந்த செயற்கைக்கோளானது தரையில் இருந்து சுமாா் 475 கி.மீ. தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

இதில், எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு (இஒஐஆா்), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு (ஜிஎன்எஸ்எஸ்-ஆா்), சிக் யுவி டோசிமீட்டா் ஆகிய 3 ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இஒஐஆா் கருவி பேரிடா் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவில் துல்லியமான படம் எடுக்கவும், ஜிஎன்எஸ்எஸ்-ஆா் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீா்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்பட இருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com