காலாண்டில் மாறாத வேலைவாய்ப்பின்மை விகிதம்

முந்தைய நிதியாண்டின் அதே காலாண்டைப் போலவே 6.6 சதவீதமாக உள்ளது.
காலாண்டில் மாறாத வேலைவாய்ப்பின்மை விகிதம்
Published on
Updated on
1 min read

கடந்த ஜூன் காலாண்டில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் முந்தைய நிதியாண்டின் அதே காலாண்டைப் போலவே 6.6 சதவீதமாக உள்ளது.

இது குறித்து தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (என்எஸ்எஸ்ஓ) தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் மாற்றமில்லாமல் 6.6 சதவீதமாக உள்ளது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டிலும் இதே விகித்தில்தான் இருந்தது.

15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோா் இடையே நிலவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் (2023-24-ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டு) 6.7 சதவீதமாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் சற்று குறைந்துள்ளது என்று அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com