பாரா ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுடன் உரையாடிய பிரதமர் மோடி!

பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடிய பிரதமர்.
பாரா ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுடன் உரையாடிய பிரதமர் மோடி!
Published on
Updated on
1 min read

பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் காணொலி வாயிலாக வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார்.

2024 பாரா ஒலிம்பிக் தொடர் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், இந்தியா சார்பில் 12 விளையாட்டுப் போட்டிகளில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

வில்வித்தை, பேட்மிண்டன், சைக்கிளிங், பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ் என 12 விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், தற்போது ஒலிம்பிக்கில் பங்கேற்கும்வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் காணொலி வாயிலாக கலந்துரையாடினர்.

இதில் பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வாழ்வின் தடைகளை தன்னம்பிக்கையால் தகர்க்க முடியும் என்பதை இந்திய விளையாட்டு வீரர்கள் நிரூபித்துள்ளனர். பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் நாட்டிற்கு பல்வேறு பதக்கங்களைக் குவிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனக் குறிப்பிட்டார்.

விளையாட்டு வீரர்களின் மன உறுதியை உயர்த்தவும், அவர்களை வாழ்த்தவும் நாங்கள் ஒன்றுகூடியுள்ள தருணம் பெருமைக்குரியது. இம்முறை அதிக எண்ணிக்கையிலான வீரர், வீராங்கனைகள் இந்தியாவிலிருந்து செல்கின்றனர். 20245 பாரீஸ் பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் 50% வீரர், வீராங்கனைகள் முதல்முறையாக பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர்.

விளையாட்டில் தனது திறமையை வெளிப்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், வாழ்வின் தடைகளை தன்னம்பிக்கை மூலம் வெல்ல முடியும் என்பதை நிரூபிக்கவுள்ளனர்.

பாரா ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுடன் உரையாடிய பிரதமர் மோடி!
திமுக - பாஜக இடையே ரகசிய உறவா? இபிஎஸ்ஸுக்கு அண்ணாமலை பதிலடி!

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 19 விருதுகளையும், ஆசிய பாரா ஒலிம்பிக்கில் 111 விருதுகளையும் இந்தியா வென்றிருந்தது. இம்முறை தங்கள் சிறந்த முயற்சியை வெளிப்படுத்தி, வரலாறு படைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என மாண்டவியா குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com