புகைப்படம்.. பெண் மருத்துவருக்கு கொடுக்கும் மரியாதையா? உச்ச நீதிமன்றம்

புகைப்படம் வெளியான விவகாரத்தில் பெண் மருத்துவருக்கு கொடுக்கும் மரியாதையா? என உச்ச நீதிமன்றம் கேள்வி
உச்ச நீதிமன்ற அமர்வு
உச்ச நீதிமன்ற அமர்வு
Published on
Updated on
1 min read

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், பெண் மருத்துவரின் புகைப்படமும், கொலைச் சம்பவம் தொடர்பான வரைபடங்களும் அதிகளவில் வெளியாகியிருப்பது வருத்தமளிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இதுதான் உயிரிழந்த பெண்ணுக்குக் கொடுக்கும் மரியாதையா என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

பலியான பெண்ணின் பெயர் மற்றும் புகைப்படம், பொது வெளியில் எப்படி கசிந்தது? பாலியல் வன்கொடுமை செய்யப்படும் பெண்ணின் அடையாளம் வெளியிடப்படுவது அவரது மரியாதை மீது நடத்தப்படும் அநீதி என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

கொல்கத்தாவில் இயங்கி வரும் ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த பெண் மருத்துவர் படுகொலை வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது வரை எந்தவிதமான விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்பது குறித்து வரும் வியாழக்கிழமைக்குள் விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவில் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

உச்ச நீதிமன்ற அமர்வு
கொல்கத்தா விவகாரம்: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது. இன்று காலை விசாரணை தொடங்கிய நிலையில், இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்னை அல்ல, ஒட்டுமொத்த மருத்துவர்களின் பிரச்னை என்ற உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

மேலும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் தாமதம் குறித்து கொல்கத்தா காவல்துறைக்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. மேலும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தேசிய பணிக் குழுவை அமைக்க தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆணாதிக்க மனநிலை காரணமாகவே நோயாளிகளின் உறவினர்கள், பெண் மருத்துவர்களை தாக்குகிறார்கள். மருத்துவர்கள் பல்வேறு வன்முறைக்கு ஆளாவது தொடர்கதையாகவே உள்ளது. இவற்றை தடுக்க, தாக்குதல் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க மற்றொரு வன்கொடுமை சம்பவத்துக்காகக் காத்திருக்க முடியாது. இரவு நேரங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஓய்வு அறைகள் கூட இல்லை என்பது வருத்தமளிக்கிறது. சில மருத்துவமனைகளில், மருத்துவர்கள் தொடர்ந்து 36 மணி நேரம் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மருத்துவமனைகளில், பணியாற்றும் மருத்துவர்களுக்குக்கூட சுகாதாரமான பணியிடம் அமைத்துக்கொடுக்கப்படுவதில்லை. மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மேற்கு வங்க அரசு தவறிவிட்டது என்றும் உச்ச நீதிமன்றம் கவலையை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com