
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் உள்ள அரசியல்வாதிகள் குறித்த அறிக்கையை தேர்தல் உரிமை அமைப்பு வெளியிட்டுள்ளது.
தேர்தல் உரிமை அமைப்பின் சமீபத்திய அறிக்கையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
2019, 2024 தேர்தல்களின்போது, இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தற்போதைய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் 4,809 பிரமாணப் பத்திரங்களில் 4,693 பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 16 எம்.பி.க்கள், 135 எம்.எல்.ஏ.க்களும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை எதிர்கொள்வது தெரிய வந்தது.
அறிக்கையின்படி, குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் 25 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் மேற்கு வங்கம் முதலிடத்திலும், 21 பேரைக் கொண்ட ஆந்திரம் இரண்டாவது இடத்திலும், ஒடிஸா 17 பேருடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
மேலும், பாஜகவில் அதிக எண்ணிக்கையிலாக 54 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸில் 23 பேரும், தெலுங்கு தேசம் கட்சியில் 17 பேரும் பாலியல் வழக்குகளில் சிக்கியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர்களாக பாஜகவில் 5 பேரும், காங்கிரஸில் 5 பேரும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.