இவர்கள் எல்லாம் வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறைக்கு எதிரானவர்களா?
முன்னாள் கூகுள் தலைமை செயல் நிர்வாகி எரிக் ஸிமிட்த், செயற்கை நுண்ணறிவுப் போட்டியில், வீட்டிலிந்தே வேலை முறையால் கூகுள் பின்தங்கியிருந்தாகக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
ஆனால், பிறகு தனது கருத்தை அவர் திரும்பப்பெற்றுக்கொண்டார்.
கரோனா மூலமாக பெருமளவில் நடைமுறைக்கு வந்த வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறைக்கு இவர் ஒருவர் மட்டும் எதிரானவர் அல்ல என்றும், பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் எதிராகத்தான் இருப்பதுதெரிய வந்துள்ளது.
பணியாளர்களின் செயல்திறனில் எதிர்மறையான உள்ளீடுகளை வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறை கொண்டு வருவதாக சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, மெட்டா தலைமை செயல் நிர்வாகி மார்க் ஸுக்கர்பெர்க் மற்றும் டெஸ்லா தலைமை செயல் நிர்வாகி எலான் மஸ்க் உள்ளிட்டோரும், நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையை விமர்சித்துள்ளனர்.
தங்களது நேரடியான போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், கூகுள், செயற்கை நுண்ணறிவில் பின்தங்கியிருக்கக் காரணம் வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறைதான் என்று வாதிடுகிறார்.
கூகுள் நிறுவனம் வேலை - வாழ்க்கை இரண்டையும் சமநிலைப்படுத்த முடிவு செய்திருக்கிறது. விரைவாக வீட்டுக்குச் செல்வது மற்றம் வீட்டிலிருந்தே வேலை செய்வது போன்றவை வெற்றி பெறுவதை விடவும் முக்கியம் என்கிறார் எரிக்.
நான் நிலவொளியில் வேலை செய்வேன், நான் வீட்டிலிருந்தே வேலை செய்வேன், நான் வாரத்தில் மூன்று நாள்கள்தான் பணிக்கு வருவேன் என்பது போன்ற வலைகளில் ஊழியர்கள் சிக்க வேண்டாம் என்று கூறியிருந்தார் நாராயண மூர்த்தி.
ஒரு பரிசோதனை முயற்சி முடிந்துவிட்டது, முற்றிலும் வீட்டிலிருந்தே வேலை செய்வது என்பது நல்லது அல்ல, குறிப்பாக புத்தாக்க தொழில்களுக்கு என்கிறார் ஓபன் ஏஐ நிர்வாகி.
வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களை விடவும், அலுவலகம் வரும் பொறியாளர்கள் அதிக வேலைகளை முடிக்கிறார்கள் என்கிறார் மார்க் ஸுக்கர்பெர்க்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.