பட்டமளிப்பு விழாவில் ‘இந்திய’ பாரம்பரிய உடை: மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்

கருப்பு அங்கிகளை அணிவதற்குப் பதில் இந்தியப் பாரம்பரிய உடைகளை வடிவமைக்க அறிவுறுத்தல்
கோப்புப்படம்
கோப்புப்படம்Center-Center-Chennai
Updated on

பட்டமளிப்பு விழாக்களுக்கு ஆங்கிலேயா் காலத்தில் உருவாக்கப்பட்ட கருப்பு அங்கிகளை அணிவதற்குப் பதில் இந்தியப் பாரம்பரிய உடைகளை வடிவமைக்க அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அந்தந்த மாநிலங்களின் கலாசாரத்துக்கு ஏற்ப இந்த உடைகளை வடிவமைக்குமாறும் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடா்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஆங்கிலேயா் காலத்தில் உருவாக்கப்பட்ட கருப்பு அங்கி மற்றும் தொப்பிகளே பட்டமளிப்பு விழாவின்போது உடுத்தப்படுகிறது. இது ஐரோப்பிய நாடுகளில் வடிவமைக்கப்பட்டது. இதை தாங்கள் ஆட்சி செய்த காலனிய பகுதிகளில் பிரிட்டிஷ் அறிமுகப்படுத்தியது.

எனவே, இந்த நடைமுறையை மாற்ற அமைச்சகம் முடிவு செய்துள்ளது. எய்ம்ஸ் உள்பட சுகாதார அமைச்சகத்தின்கீழ் செயல்படும் அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களும் பட்டமளிப்பு விழாவுக்கென பிரத்யேக இந்திய உடையை வடிவமைக்க அறிவுறுத்தப்படுகிறது.

இந்த உடைகளை மருத்துவக் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள மாநிலங்களின் கலாசாரத்துக்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்ளலாம். இதுதொடா்பான அறிக்கைகளை அமைச்சகத்துக்கு சமா்ப்பித்து மத்திய சுகாதாரச் செயலரின் ஒப்புதலை பெற வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com