
இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் அவசியத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் 90 சதவிகித மக்கள் நிர்வாக அமைப்பைவிட்டு விலகி வெளியே இருப்பதாகவும், அவர்களுக்காக இந்த கணக்கெடுப்பு அவசியம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்ற சம்விதான் சம்மான் சம்மேளனம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி, “90 சதவிகித மக்களுக்கு திறனும், கல்வியறிவும் இருந்தும் நிர்வாக அமைப்புடன் அவர்களுக்கு தொடர்பில்லை. இதன் காரணமாகவே ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.
காங்கிரஸுக்கு, கொள்கை உருவாக்கத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பே அடிப்படையானது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.