பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு-காஷ்ர்(கோப்புப்படம்).

Published On :

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீர், பாரமுல்லாவின் சோபூர் பகுதியில் பயங்கரவாதிகளுடன் இன்று அதிகாலை சிறிது நேரம் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அப்போது துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த சில மாதங்களாக, தோடா மற்றும் உதம்பூரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி யூனியன் பிரதேசத்தில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4-ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.