ஜம்மு -காஷ்மீர் பேரவைத் தேர்தலையொட்டி பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு சில நிமிடங்களில் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
ஜம்மு -காஷ்மீருக்கு வருகிற செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதையடுத்து தேர்தலுக்கான ஏற்பாடுகளை தோ்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
தேர்தலையொட்டி கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் பாஜக இன்று(திங்கள்கிழமை) காலை 44 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் மூன்று கட்டங்களிலும் முறையே 15, 10, 19 இடங்களுக்கு அறிவிக்கப்பட்டனர்.
ஆனால், அடுத்த ஓரிரு மணி நேரங்களில் இந்த பட்டியல் வாபஸ் பெறுவதாக அறிவித்தது.
தற்போதைய பட்டியலில் சில மாற்றங்கள் செய்ய முடிவெடுத்துள்ளதால் பட்டியல் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் மாற்றம் செய்யப்பட்ட புதிய பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் பாஜக கூறியது.
இதன் பின்னர் அடுத்த சில மணி நேரங்களில் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதற்கட்டத் தேர்தலில் போட்டியிடும் 15 வேட்பாளர்கள் பட்டியலை மட்டும் வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.