
சம்பயி சோரனும், ஹேமந்த் சோரனும் பாஜகவில் இணைய வேண்டும் என அசாம் முதல்வரும், ஜார்கண்ட் பாஜக பொறுப்பாளருமான ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஞ்சியில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சம்பயி சோரன், பாஜகவில் இணைந்து எங்களுக்கு வலு சேர்க்க வேண்டும், ஆனால் அவர் பெரிய தலைவர், அவரைப் பற்றி கருத்து சொல்வது சரியல்ல என்று நினைக்கிறேன். ஹேமந்த் சோரனும் பாஜகவில் இணைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பாஜக என்றால் தேசபக்தி.
ஜார்க்கண்டில் ஊடுருவும் நபர்களை தடுக்க ஹேமந்த் சோரனிடம் பேசவும் தயாராக உள்ளோம். நம்மைப் பொறுத்தவரை நாடுதான் முதன்மையானது. இன்று ஜார்கண்ட் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரசனை ஊடுருவல்காரர்களே. தேர்தலின் போது நீங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி ஜார்கண்ட் மாநிலத்தை ஊடுருவல்காரர்களிடம் இருந்து விடுவிக்க வேண்டும்.
இந்த 2 கோரிக்கைகள் மட்டுமே எங்களிடம் உள்ளது. சம்பயி சோரனுக்கு 3 வழிகள் உள்ளன, அவர் தற்போது தில்லியில் இருக்கிறார். அவருடன் பேச்சு வார்த்தைக்கான வழி திறந்திருக்கிறது, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று பார்ப்போம். பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பை பாஜக ஆதரித்தது. நீங்கள் (காங்கிரஸ்) கர்நாடகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினீர்கள்.
அந்த தரவுகளை வெளியிட வேண்டும். இந்த விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு வேண்டாம். ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு என்பது பாஜகவுக்கு ஒரு பிரச்னை அல்ல. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்கு எங்கு நீதி கிடைக்கிறதோ அங்கெல்லாம் நாங்கள் நிற்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.