வெள்ளம் பாதித்த குஜராத் குடியிருப்புப் பகுதிகளில் உலாவும் முதலைகள்!

கடந்த ஐந்து நாள்களில் 10-க்கும் மேற்பட்ட முதலைகளை மீட்கப்பட்டுள்ளது.
வீட்டிற்குள் புகுந்த முதலை
வீட்டிற்குள் புகுந்த முதலை
Published on
Updated on
1 min read

குஜராத் மாநிலத்தில் பெய்த கனமழை வெள்ளம் காரணமாக வீட்டிற்குள் புகுந்த முதலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக கனமழை பெய்து வருவதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 24 ஆறுகள், 137 நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்ந்து வருகிறது.

நவ்சாரி, வதோதரா மற்றும் கெடா உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 40 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தின் நிலையைத் தொடர்ந்து அந்த மாநிலம் கண்காணித்து வருகின்றது.

வீட்டிற்குள் புகுந்த முதலை
புதிய பயணம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் ராகுல்!

இந்த நிலையில், வதோதரா மாவட்டத்தில் உள்ள விஸ்வாமித்ரி ஆற்றின் பெருக்கத்தைத் தொடர்ந்து, முதலைகள் நகருக்குள் உலாவத் தொடங்கியுள்ளன. நகரத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் முதலைகள் வீட்டிற்குள் வரும் காட்சிகளை மக்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதனிடையே வதோதராவின், அகோடா ஸ்டேடியம் பகுதியில் 15 அடி நீள ராட்சத முதலை ஒன்று வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு வீட்டிற்குள் புகுந்துள்ளது. பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் முதலையை மீட்டனர். இந்த காட்சிகள் வைரலாக பரவி வருகின்றது.

வீட்டிற்குள் புகுந்த முதலை
பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் மெத்தனம் காட்டும் மோடி அரசு: கார்கே காட்டம்!

மேலும், வதோதராவின் பரோடா மகாராஜா சயாயாஜிராவ் பல்கலைக்கழக வளாகத்தில் 11 அடி முதலை ஒன்றும் மீட்கப்பட்டது.

வதோதரா பகுதியில் உள்ள நற்ஹாரி மருத்துவமனை வளாகத்திலும் புகுந்த ராட்சத முதலையை பார்த்த மக்கள் அலறியடித்து ஒட்டம் பிடித்தனர்.

கடந்த ஐந்து நாள்களில் 10-க்கும் மேற்பட்ட முதலைகளை மீட்டுப் பாதுகாப்பான இடங்களில் விடுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com