கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தலித் நபரின் நிலை உங்களுக்கு எப்படித் தெரியும்? : கங்கனாவிடம் காங்கிரஸ் தலைவர் கேள்வி

சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த கங்கனாவுக்கு காங்கிரஸ் தலைவர் பதில்

News image

கங்கனா ரணாவத் (கோப்புப் படம்)

Kangana Ranaut | X

Updated On :30 ஆகஸ்ட் 2024, 12:06 pm

DIN

இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கங்கனாவின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீனேட் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சுப்ரியா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, ``சாதி கணக்கெடுப்பு இருக்கக்கூடாது என்று பாஜக எம்.பி. கங்கனா மீண்டும் கூறியுள்ளார். நீங்கள் ஒரு உயர் சாதியைச் சேர்ந்த பணக்காரர்; நடிகை மற்றும் ஒரு எம்.பி.யாக உள்ளீர்கள்.

அப்படி இருக்கையில் ஒரு தலித், பிற்படுத்தப்பட்ட, பழங்குடியைச் சேர்ந்த ஒரு தனிநபரின் நிலை உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடி அவர்களே, உங்கள் அமைதியை இப்போதாவது முறித்துக் கொள்ளுங்கள். உங்கள் நிலைப்பாட்டை, உங்கள் கூட்டணிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சிகளிடம் சொல்லுங்கள்’’ என்று கூறியுள்ளார்.

மேலும், கங்கனாவின் கருத்துக்கள் பாஜகவின் நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக சுப்ரியா கூறினார்.

கங்கனா ரணாவத் செய்தியாளர்களிடம் பேசியிருந்ததாவது, ``எனது நிலைப்பாடு யோகி ஆதித்யநாத்தின் நிலைப்பாட்டைப் போன்றது. நாங்கள் பிரிந்தால், அழிக்கப்படுவோம். அதாவது, ஒன்றாக இருங்கள்; நன்றாக இருங்கள்.

நடிகர்களின் சாதிகூட எங்களுக்குத் தெரியாது. யாருக்குமே எதுவும் தெரியாது. என்னைச் சுற்றியுள்ளவர்கள் சாதி பற்றி கவலைப்படுவதில்லை. அதை ஏன் இப்போது தீர்மானிக்க வேண்டும்?

நாங்கள் அதை முன்பு செய்யவில்லை. இப்போது மட்டும் ஏன் செய்ய வேண்டும்? சாதி கணக்கெடுப்பு இருக்கக்கூடாது. பெண்களுக்கு பாலினத்தின் அடிப்படையில் மேம்பாடு தேவை, சாதி அல்ல. ஏழை, விவசாயிகள் மற்றும் பெண்கள் என மூன்று சாதிகள் மட்டுமே உள்ளன. நான்காம் சாதி இருக்கக் கூடாது’’ என்று தெரிவித்திருந்தார்.

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம் வங்கதேசத்தில் ஏற்பட்டதைப் போன்ற நிலைமையை நம் நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் என்று கங்கனா ரணாவத் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக கங்கனா தெரிவித்த கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று பாஜக தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், "விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் தெரிவித்துள்ள கருத்து எங்கள் கட்சியின் கருத்து அல்ல. அவர் தெரிவித்த கருத்து எங்களுக்கு ஏற்புடையது அல்ல.

கட்சியின் கொள்கை விவகாரங்கள் தொடர்பாக அறிக்கை வெளியிடும் அதிகாரம் கங்கனாவுக்கு வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.