கங்கனா ரணாவத் திரைப்படத்தை தடை செய்ய தெலங்கானா அரசு பரிசீலனை

‘எமொ்ஜென்சி’ ஹிந்தி திரைப்படத்தை தங்கள் மாநிலத்தில் வெளியிடத் தடை செய்வது குறித்து தெலங்கானா அரசு பரிசீலனை...
கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்படம்: எமர்ஜென்சி டிரைலர் / யூடியூப்
Updated on

பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘எமொ்ஜென்சி’ ஹிந்தி திரைப்படத்தை தங்கள் மாநிலத்தில் வெளியிடத் தடை செய்வது குறித்து தெலங்கானா மாநில அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தில் மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளாா்.

தடைக்கான பரிசீலனை குறித்து தெலங்கானா மாநில அரசு ஆலோசகா் முகமது அலி சபீா் கூறுகையில், ‘கங்கனாவின் படத்தை தடை செய்ய வேண்டும் என்று சீக்கிய அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா். அதனை பரிசீலிப்பதாக முதல்வா் ரேவந்த் ரெட்டியும் வாக்குறுதி அளித்துள்ளாா்’ என்றாா்.

சீக்கியா்களின் மதிப்பைக் குறைக்கும் வகையில் ‘எமொ்ஜென்சி’ படத்தில் சில காட்சிகள் உள்ளதாக தெரிகிறது. எனவே, சீக்கிய அமைப்பினா் தடை கோரியுள்ளனா்.

மேலும், விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா சா்ச்சைக்குரிய வகையில் பேசியதையடுத்து, அப்போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த சீக்கிய விவசாயிகளும் கங்கனா மீது அதிருப்தியில் உள்ளனா்.

இதனிடையே, ‘எமொ்ஜென்சி’ திரைப்படத்துக்கு தணிக்கைக் குழு அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என்று ‘எக்ஸ்’ வலைதளத்தில் கங்கனா ரணாவத் பதிவிட்டுள்ளாா். அத்திரைபடத்தை செப்டம்பா் 6-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com