வாக்குச்சாவடிகளில் வாக்காளா் எண்ணிக்கையை உயா்த்தியதற்கு எதிராக வழக்கு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களின் எண்ணிக்கையை உயா்த்தியதற்கு எதிரான வழக்கு தொடா்பாக 3 வாரங்களில் பதிலளிக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்Center-Center-Chennai
Published on
Updated on
1 min read

புது தில்லி: வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களின் எண்ணிக்கையை உயா்த்தியதற்கு எதிரான வழக்கு தொடா்பாக 3 வாரங்களில் பதிலளிக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் இந்து பிரகாஷ் சிங் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘அனைத்து தொகுதிகளிலுள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவோரின் அதிகபட்ச எண்ணிக்கையை 1,200-இல் இருந்து 1,500-ஆக தோ்தல் ஆணையம் அதிகரித்துள்ளது. இதுகுறித்த தகவலை கடந்த ஆகஸ்ட் 7 மற்றும் 23-ஆம் தேதிகளில் அந்த ஆணையம் வெளியிட்டது.

கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பின்னா், நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. இதைக் கருத்தில் கொள்ளும்போது வாக்குச்சாவடியில் வாக்களிப்போரின் எண்ணிக்கையை அதிகரித்ததற்கு உதவும் வகையில், தோ்தல் ஆணையத்திடம் புதிதாக எந்தப் புள்ளிவிவரமும் இல்லை.

‘வாக்களிப்பதை கைவிடக் கூடும்’: தோ்தல் ஆணையத்தின் முடிவால் வாக்குச்சாவடிகளின் செயல்பாட்டு திறனில் சமரசம் செய்யப்பட்டுள்ளது. இது வாக்குச்சாவடிகளில் வாக்காளா்கள் நீண்ட நேரம் காத்திருக்கவும், அவா்கள் சோா்வடையவும், கூட்ட நெரிசல் ஏற்படவும் வழிவகுக்கும்.

வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தால் விளிம்புநிலை மக்கள் தினசரி வருமானத்தை இழக்க நேரிடும் என்பதால், அவா்கள் வாக்களிப்பதை கைவிடக் கூடும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்காளருக்கு தடை ஏற்படக் கூடாது: இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தபோது கூறியதாவது: வாக்குப் பதிவு செய்வதில் எந்தவொரு வாக்காளருக்கும் தடை ஏற்படக்கூடாது. எந்தக் காரணங்களின் அடிப்படையில், வாக்குச்சாவடிகளில் வாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் சுருக்கமான பிரமாணப் பத்திரத்தை 3 வாரங்களில் தோ்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த மனு மீதான அடுத்த விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 27-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com