வகுப்பறையில் பின்வரிசை மாணவர்.. ஃபட்னவீஸ் பற்றி ஆசிரியர் பகிர்ந்த சுவாரசியம்!

மகாராஷ்டிரத்தின் முதல்வராக நாளை பதவியேற்கிறார் ஃபட்னாவீஸ்..
காபந்து முதல்வர் ஃபட்னாவீஸ்
காபந்து முதல்வர் ஃபட்னாவீஸ்
Published on
Updated on
1 min read

மூன்றாவது முறையாக மகாராஷ்டிரத்தின் முதல்வராகப் பதவியேற்க உள்ள தேவேந்திர ஃபட்னாவீஸ் பற்றி பள்ளி ஆசிரியர் ஒருவர் பகிர்ந்த சுவாரசிய தகவல்..

மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் இன்று காலை நடத்தப்பட்ட நிலையில், தற்போதைய துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் புதிய முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பையில் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

சட்டப்பேரவை பாஜக குழு தலைவர் ஃபட்னாவீஸ் முதல்வராகப் பதவியேற்க ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், முதல்வராக நாளை ஃபட்னாவீஸ் பதவியேற்கவுள்ளார்.

முதல்வராக அவர் முதல் முறையாக கடந்த 2014 முதல் 2019 வரை ஆட்சியமைத்தார். இரண்டாவதாக 2019 நவம்பரில் சுமார் 80 மணி நேரம் முதல்வராக நீடித்தார். நாக்பூரின் இளைய மேயராக ஆறு முறை எம்எல்ஏவாக பதவி வகித்த ஃபட்னாவீஸ் மகாராஷ்டிரத்தின் இரண்டாவது தலைநகரான நாக்பூரில் பள்ளிக் கல்வியை முடித்தார்.

இந்த நிலையில், சரஸ்வதி வித்யாலயாவில் 8 முதல் 10ஆம் வகுப்பு வரை ஃபட்னாவீஸின் ஆசிரியராக இருந்த சாவித்ரி சுப்ரமணியம் அவரது இயல்பை சுவாரசியமாக நினைவு கூர்ந்துள்ளார்.

ஃபட்னாவீஸ் வகுப்பில் உயரமான மாணவர்களில் ஒருவராக இருந்ததால் வகுப்பின் பின் வரிசையில் எப்போதும் அமர்ந்திருப்பார். படிப்பில் சராசரி மாணவர் தான். ஆனால் அசாதாரணமானவர், நன்றாகப் படித்தார். அவர் மிகவும் கண்ணியமான, மகிழ்ச்சியான மாணவர்.

அதேசமயம் உணர்ச்சிவசப்படக்கூடிய மாணவராகவும், மற்ற மாணவர்களுக்கு உதவக்கூடியவராகவும் இருந்தார். வகுப்பில் அவரது பேச்சு தனித்தன்மையானது, புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். அவரது வகுப்பில் போலியோவால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு ஃபட்னாவீஸ் எப்போதும் உதவியாக இருந்தார்.

பள்ளி நாள்களில் ஃபட்னாவிஸ் மேடையில் நடித்ததில்லை. நல்ல பேச்சாளராக மாறுவார் என்று நினைத்ததில்லை. மிகவும் கண்ணியமான மற்றும் எளிமையான மாணவர்.

அவரது தந்தை கங்காதரராவ் ஃபட்னாவீஸ் எம்எல்சியாக இருந்தபோதும் தனது குடும்பத்தின் அரசியல் பின்னணியைப் பற்றி ஒருபோதும் அவர் பெருமை கொண்டதில்லை. எப்போதும் தனது கொள்கைகளில் மிகவும் தெளிவாக இருந்தார் என்று அவர் நினைவுகூர்ந்தார்.

ஃபட்னாவீஸ் மீண்டும் மகாராஷ்டிரத்தின் முதல்வராகப் பதவியேற்கவுள்ளது மகிழ்ச்சி. அவரது சாதனைக்காக மிகவும் பெருமைப்படுவதாகக் கூறினார். மாநிலத்தை மீண்டும் பெரியதாக மாற்ற சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் அழைத்துச் சென்று மக்களை ஒன்றிணைக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com