சுக்பீர் சிங் பாதல் செல்லும் குருத்வாராவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!
பஞ்சாப் அனந்தபூர் சாஹிப்பில் உள்ள சீக்கிய கோயிலுக்கு சுக்பீர் சிங் பாதல் இன்று செல்லவிருப்பதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரும் சிரோமணி அகாலி தளம் தலைவருமான சுக்பீர் சிங் பாதலுக்கு, சீக்கிய அமைப்பான அகல் தக்த் தண்டனை விதித்தது.
சுக்பீர் சிங் பாதல், சீக்கிய கோயில்களில் சமையலறைகள், கழிவறைகளில் சேவகராகவும், துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.
அதன்படி, டிசம்பர் 3 ஆம் தேதி அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில், கழுத்தில் தகடு அணிந்து, சக்கர நாற்காலியில் அமர்ந்து அகல் தக்த் விதித்த தண்டனையை நிறைவேற்றத் தொடங்கினார்.
இதையும் படிக்க | பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரை சுட்டுக்கொல்ல முயற்சி!
இந்நிலையில் சுக்பீர் சிங் பாதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது நேற்று(புதன்கிழமை) காலை சுக்பீர் சிங்கை ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் நூலிழையில் உயிர் தப்பினார். தாக்குதல் நடத்திய நாராயண் சிங் சௌரா என்பவரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து இந்தியாவில் சீக்கியர்களின் புனிதத் தலங்களில் முக்கிய ஒன்றான பஞ்சாபில் அனந்தபூர் சாஹிப்பில் உள்ள தகாத் ஸ்ரீ கேஸ்கர் சாஹிப்பில், சுக்பீர் சிங் பாதல் இன்று சேவை செய்ய உள்ளார்.
அவர் வருவதை முன்னிட்டு குருத்வாராவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.