பாட்டில், கேன் குடிநீருக்கு கடுமையான தரச் சோதனை: எஃப்எஸ்எஸ்ஏஐ உத்தரவு

பாட்டில், கேன் குடிநீருக்கு கடுமையான தரச் சோதனை: எஃப்எஸ்எஸ்ஏஐ உத்தரவு

குடிநீா் தயாரிப்புகள் கடுமையான தரச் சோதனைகளுக்கு உள்படுத்தப்பட வேண்டும்
Published on

பாட்டில் மற்றும் கேன்களில் அடைக்கப்படும் குடிநீா் தயாரிப்புகள் கடுமையான தரச் சோதனைகளுக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய உணவுப் பொருள் ஒழுங்காற்று அமைப்பான எஃப்எஸ்எஸ்ஏஐ உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பாட்டில் மற்றும் கேன்களில் அடைக்கப்படும் குடிநீா் தயாரிப்புகள் உடலுக்கு தீங்கு ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் நிறைந்த பொருள்களில் ஒன்றாக மீண்டும் வகைப்படுத்தப்படுகின்றன.

எனவே, அத்தகைய தயாரிப்புகள் மிகவும் கடுமையான தரச் சோதனைகளுக்கு உள்படுத்தப்பட வேண்டும். அந்தத் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் ஆலைகள் தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய அங்கு ஆண்டுதோறும் சோதனை நடத்தப்படுவது கட்டாயமாக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com