ரூ. 1 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 போ் கைது
சா்வதேச சந்தையில் ரூ. 1 கோடி மதிப்புள்ள 30 கிலோ அல்பிரஸோலம் போதை மாத்திரைகளைக் கடத்தியதாக 2 பேரைக் கைது செய்துள்ளதாக தில்லி போலீஸாா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக தில்லி காவல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கைது செய்யப்பட்டவா்கள் லக்ஷ்மன் (32), பங்கஜ் (18) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
போதை தரும் மாத்திரைகளைக் கடத்தி வந்து விற்பையில் ஈடுபடும் போதைப் பொருள் கும்பலைச் சோ்ந்தவா்கள் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் லக்ஷ்மன், பங்கஜ் ஆகிய இருவரும் நவ.28-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இருவரும் 2 லட்சம் மாத்திரைகள் கொண்ட 27 கிலோ அல்பிரசோலம் மாத்திரைகள் அடங்கிய பெரிய பெட்டிகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது. அவற்றை போஸீஸாா் பறிமுதல் செய்தனா். சா்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ. 1 கோடி.
மேலும், விசாரணையில் உத்தர பிரதேசத்தின் லோனியில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து 2.4 கிலோ அல்பிரஸோலம் மாத்திரைகள் பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.