அம்பேத்கர் நினைவு நாள்: நாடாளுமன்றத்தில் தலைவர்கள் மரியாதை!
அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு நாள் இன்று(டிச. 6) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அமைப்பினர் அவருக்கு இன்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | டாக்டர் அம்பேத்கர் மறைந்த அந்த நாளில்......
அந்த வகையில், நாடாளுமன்றத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் மரியாதை செலுத்தினர்.
அதுபோல எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி . பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார்கள்.
அப்போது ராகுல் காந்தி அம்பேத்கரின் உருவப் படத்திற்கு கீழே அரசமைப்புப் புத்தகத்தை வைத்து வணங்கினார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, அங்கு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கும் திருவுருவப் படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

