அமைச்சா் ஜெய்சங்கா்
அமைச்சா் ஜெய்சங்கா் -

டாலருக்கு எதிராக பிரிக்ஸ் நாணயம்? அமைச்சா் ஜெய்சங்கா் பதில்

டாலருக்கு பதிலாக புதிய பணத்தின் மூலம் வா்த்தகத்தை மேற்கொள்ள இந்தியா எப்போதும் நினைத்ததில்லை
Published on

டாலருக்கு பதிலாக புதிய பணத்தின் மூலம் வா்த்தகத்தை மேற்கொள்ள இந்தியா எப்போதும் நினைத்ததில்லை என்று அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

கத்தாா் பிரதமரும் வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சருமான முகமது பின் அப்துல் ரகுமானின் அழைப்பை ஏற்று 22-ஆவது ‘தோஹா கூட்டாண்மை’ நிகழ்ச்சியில் ஜெய்சங்கா் பங்கேற்றாா்.

அப்போது, செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு அவா் அளித்த பதில், ‘டாலருக்கு பதிலாக பிரிக்ஸ் கூட்டமைப்பு சாா்பில் பொதுவான பணத்தை உருவாக்கினால் உறுப்பு நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளாா். அவ்வாறு அவா் கூறியதற்கான காரணம் தெரியவில்லை. தற்போது வரை இதுபோன்ற முன்னெடுப்பை பிரிக்ஸ் மேற்கொள்ளவில்லை.

அனைவரையும் உள்ளடக்கிய பேச்சுவாா்த்தை மற்றும் புதுமையான பேச்சு மூலம் பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும்; ரஷியா -உக்ரைன் போா் தொடருவதைவிட அதை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவாா்த்தையை நடத்துவது குறித்தே பலரும் சிந்தித்து வருகின்றனா்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com