மகாராஷ்டிரத்தில் எதிர்க்கட்சியினர் இன்று பதவியேற்கவில்லை! ஏன்?

மகாராஷ்டிரத்தில் சிவசேனை(யுபிடி) கட்சி எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்கப் போவதில்லை என்று அக்கட்சியின் தலைவர் ஆதித்யா தாக்கரே கூறியுள்ளார்.
Aaditya Thackeray
ஆதித்யா தாக்கரே
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிரத்தில் சிவசேனை(யுபிடி) கட்சி எம்எல்ஏக்கள் இன்று(சனிக்கிழமை) பதவியேற்கப்போவதில்லை என்று அக்கட்சியின் தலைவர் ஆதித்யா தாக்கரே கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது.

தொடர்ந்து கடந்த டிச. 5 ஆம் தேதி மும்பை ஆசாத் மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வர்களாக அஜீத் பவாரும், ஏக்நாத் ஷிண்டேவும் பதவியேற்றுக் கொண்டனர். ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து புதிய அரசின் மூன்று நாள் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.

இதில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்கின்றனர்.

இந்நிலையில், சிவசேனை(யுபிடி) கட்சி எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஆதித்யா தாக்கரே கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

'சிவசேனை(யுபிடி) கட்சியில் வெற்றிபெற்றவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம்.

இந்த ஆட்சி மக்களின் விருப்பமாக இருந்திருந்தால் மக்கள் கொண்டாடி இருப்பார்கள். ஆனால், பாஜக கூட்டணியின் வெற்றியை மக்கள் கொண்டாடவில்லை.

எங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சந்தேகம் உள்ளது. அதனால் இன்று பதவியேற்பைத் தவிர்க்கிறோம்' என்று கூறியுள்ளார்.

அதுபோல மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினரும் இன்று எம்எல்ஏக்களாக பதவியேற்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com