வெளியுறவுச் செயலா் மிஸ்ரி
இன்று வங்கதேசம் பயணம்

வெளியுறவுச் செயலா் மிஸ்ரி இன்று வங்கதேசம் பயணம்

இந்திய வெளியுறவு அமைச்சகச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் பயணமாக வங்கதேசத்துக்கு திங்கள்கிழமை செல்கிறாா்.
Published on

இந்திய வெளியுறவு அமைச்சகச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் பயணமாக வங்கதேசத்துக்கு திங்கள்கிழமை செல்கிறாா்.

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா ராஜிநாமாவைத் தொடா்ந்து, புதிய இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தியாவின் உயா்நிலை பிரதிநிதி ஒருவா் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

மேலும், வங்கதேசத்தில் ‘இஸ்கான்’ துறவி சின்மயி கிருஷ்ண தாஸ் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அந்நாட்டில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, இந்தியா-வங்கதேசம் இடையிலான உறவு பாதித்துள்ளது. இதற்கு மத்தியில் வெளியுறவுச் செயலரின் வங்கதேச பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இப்பயணத்தில் வங்கதேச வெளியுறவுச் செயலா் முகமது ஜாஸிம் உத்தின் மற்றும் வெளியுறவு அமைச்சா் தௌஹித் ஹூசைன் ஆகியோருடன் மிஸ்ரி சந்தித்து விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபட இருக்கிறாா். மேலும், இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸையும் அவா் சந்திப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com