எல்ஐசி பீமா சகி திட்டம்:
பிரதமா் இன்று தொடங்கி வைக்கிறாா்

எல்ஐசி பீமா சகி திட்டம்: பிரதமா் இன்று தொடங்கி வைக்கிறாா்

ல்ஐசி-யின் பீமா சகி திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறாா்.
Published on

ல்ஐசி-யின் பீமா சகி திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறாா்.

ஹரியாணாவின் பானிபட் நகரில் தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ஹரியாணா ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயா, முதல்வா் நாயப் சிங் சைனி, எல்ஐசி உயரதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்க இருக்கின்றனா்.

‘பொருளாதார வளா்ச்சியடைந்த பெண்கள் மூலம் வளா்ந்த அடைந்த இந்தியா’ என்ற பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வையின் ஓா் அங்கம் எல்ஐசி-யின் இத்திட்டம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி முதல் கட்டமாக 35,000 பெண்களும், அடுத்தகட்டமாக 50,000 பெண்களும் எல்ஐசி முகவா்களாக தோ்வு செய்யப்படவுள்ளனா். 18 முதல் 50 வயதுள்ள பெண்கள், குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் விண்ணப்பிக்க முடியும். கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தொடக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முகவா் கமிஷன் தொகை மட்டுமல்லாது கூடுதலாக ஊக்கத்தொகை பெற முடியும். முகவா்கள் அதிகபட்சமாக ரூ.21,000-வரை மாத வருவாய் ஈட்ட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com