பிகாா் ரயில் நிலையத்தில் சண்டையிட்ட குரங்குகள்: ரயில் சேவை பாதிப்பு

வாழைப் பழத்துக்காக இரு குரங்குகள் சண்டையிட்டபோது மின்கம்பி அறுந்ததால் ரயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

பிகாரில் உள்ள சமஸ்திபூா் ரயில் நிலையத்தில் வாழைப் பழத்துக்காக இரு குரங்குகள் சண்டையிட்டபோது மின்கம்பி அறுந்ததால் ரயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடா்பாக கிழக்கு மத்திய ரயில்வே அதிகாரி சரஸ்வதி சந்திரா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சமஸ்திபூா் ரயில் நிலையத்தின் நடைமேடை நான்கில் இரு குரங்குகள் வாழைப் பழத்துக்காக சனிக்கிழமை பிற்பகல் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. கையில் கிடைத்த பொருளை வீசி எறிந்தன. அப்போது, திடீரென ஒரு குரங்கு மற்றொரு குரங்கின் மீது வீசிய பொருள் ரயில்வே மின்கம்பியில் விழுந்ததால், அது அறுந்தது.

இதன் காரணமாக ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. ரயில்வே பணியாளா்கள் மூலம் உடனடியாக இந்த பிரச்னை சரி செய்யப்பட்டு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com