
தில்லி கலால் கொள்கை பணமோசடி வழக்குககளில் ஜாமீன் நிபந்தனைகளைத் தளர்த்தக்கோரி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவின் மனுக்கள் டிசம்பர் 11ல் விசாரணைக்கு வரும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிசோடியா சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்கி, நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு சிசோடியாவின் ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தக்கோரி மனு தாக்கல் செய்த நிலையில், டிசம்பர் 11 அன்று விசாரிக்க பெஞ்ச் கோரிக்கை விடுத்த நிலையில், அந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
இதன்படி ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தக்கோரிய வழக்கை டிசம்பர் 11 அன்று உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.
கடந்த நவம்பர் 22ல் சிசோடியாவின் மனுக்களை விசாரிக்க ஒப்புக்கொண்ட உச்ச நீதிமன்றம், மத்திய புலனாய்வு பிரிவு(சிபிஐ) மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
முன்னதாக ஆகஸ்ட் 9 அன்று சிசோடியாவுக்கு தில்லி கலால் கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அத்துடன் ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழன் அன்றும் காலை 10 முதல் 11 மணிக்குள் விசாரணை அதிகாரியிடம் ஆஜராக வேண்டும். 10 லட்சம் செலுத்துவதோடு, தனது கடவுச்சீட்டை ஒப்படைப்பு உள்ளிட்ட நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.
ஜாமீன் நிபந்தனைகளை தளக்கக்கோரிய மணீஷ் சிசோடியாவின் மனுக்களை டிசம்பர் 11ல் விசாரணை பட்டியலிட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.