
சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற தராக மந்திரத்தைப் பின்பற்றும் வளர்ச்சி ஒவ்வொரு துறையிலும் பிரதிபலிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.
ராஜஸ்தான் உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி,
உலகில் உள்ள ஒவ்வொரு நிபுணர்களும், முதலீட்டாளர்களும் இந்தியாவைக் கண்டு மிகவும் வியப்படைகின்றனர்.
மிகப்பெரிய நெருக்கடியின்போதும் தொடர்ந்து வலுவாகச் செயல்படும் பொருளாதாரம் உலகிற்குத் தேவைப்படுவதால், இந்தியாவில் பெரிய உற்பத்தித் தளம் இருப்பது அவசியம். அதைச் சீர்குலைக்கக் கூடாது என்றார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஜனநாயகமயமாக்கல் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு வகுப்பினருக்கும் எவ்வாறு பயனளிக்கிறது என்பதை இந்தியா காட்டியுள்ளது. ஜனநாயக, மக்கள்தொகை மற்றும் தரவு ஆகியவற்றின் உண்மையான சக்தியை இந்தியா உலகிற்குக் காட்டுகிறது.
இந்தியாவின் தொன்மையான பாரம்பரியத்தை இளைஞர் சக்தி முன்னெடுத்துச் செல்கிறது. வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற தாராக மந்திரத்தில் எங்களது அரசு செயல்பட்டு வருவதாகவும், மாநிலம் அதன்மூலம் பெரும் பலன்களைப் பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.