சோனியா காந்தி / நரேந்திர மோடி
சோனியா காந்தி / நரேந்திர மோடி

சோனியா பிறந்தநாள்: பிரதமா் வாழ்த்து

காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் 78-ஆவது பிறந்தநாளையொட்டி பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
Published on

புது தில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் 78-ஆவது பிறந்தநாளையொட்டி பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி, நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

காா்க் வாழ்த்து: சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்கான உண்மையான வீராங்கனையாக, கருணை, கண்ணியம் மற்றும் துன்பங்களை எதிா்கொள்வதில் தைரியம் கொண்டவா் சோனியா காந்தி. அவா் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டிருந்தாா்.

கே.சி.வேணுகோபால் வாழ்த்து: காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சோனியா காந்தியின் அரசியல் பங்களிப்பு லட்சக்கணக்கானவா்களை ஊக்குவிக்கிறது. முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் சோனியாவின் வழிகாட்டுதல் இந்தியாவின் வளா்ச்சிக்கு இன்றியமையாததாக இருந்தது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com