
புதுதில்லி: 2024 ஆம் ஆண்டில் தேடு தளமான கூகுளில் இந்திய மக்களால் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத் முதலிடம் பிடித்துள்ளார்.
நமது அறிவுத்தேடல் முதல் மனதில் எழும் கேள்விகள், சந்தேகங்கள் மற்றும் நம் விருப்பங்கள் என அ முதல் ஃ வரை விடையளிக்கும் தளமாக தேடுதல் தளமான கூகுள் உள்ளது. தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் மக்களின் எல்லையற்ற ஆர்வத்திற்கு விடையளிக்கும் தேடு தளமான கூகுளில், உலகளவில் ஒரு நாளைக்கு கோடிக்கணக்கானவர்கள் கோடிக்கணக்கான தேடல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றில் 15 சதவிகிதம் புதிய, புதிய தேடல்கள்.
இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் கூகுளில் தேடுதளத்தில் மக்களால் அதிகம் தேடப்பட்டவைகள் குறித்த விவரங்களை வெளியிட்டு வரும் கூகுள், நடப்பாண்டில் இந்திய மக்களால் அதிகம் தேடப்பட்டவைகள் குறித்த தகவலை கூகுள் வெளியிட்டுள்ளது.
அதாவது, நடப்பு 2024 இல் பெரும்பான்மையான மக்களின் தேடல் எதை நோக்கி இருந்துள்ளது. நாட்டில் அதிக தேடப்பட்ட பிரபலங்கள் யார்?, மக்கள் மிக அதிகமாக தேடிப் படித்த தகவல்கள் எது என்பதை கூகுள் வெளியிட்டுள்ளது.
அதிகம் தேடப்பட்ட நபர்கள்:
அதன்படி, இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட பிரபலமான நபர்களில் மல்யுத்த வீரர் வினேஷ் போகத் முதலிடம் பிடித்துள்ளார். பிகார் முதல்வர் நிதிஷ்குமார் இரண்டாவது இடத்தையும், சிராக் பாஸ்வான், ஹர்திக் பாண்டியா, பவன் கல்யாண்,சாஷங்க் சிங், பூணம் பாண்டே, ராதிகா மெர்ச்சென்ட், அபிஷேக் சர்மா, லக்சயா சென் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்
அதேபான்று அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் ஐபிஎல் முதலிடத்திலும், டி20 உலகக் கோப்பை இரண்டாவது இடத்திலும், பாஜக மூன்றாவது இடத்திலும், 2024 தேர்தல் முடிவுகள், ஒலிம்பிக்ஸ், அதிக வெப்பம், ரத்தன் டாடா, இந்திய தேசிய காங்கிரஸ், ப்ரோ கபடி லீக், இந்தியன் சூப்பர் லீக் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.
அதிகம் தேடப்பட்ட விளையாட்டு
இந்திய மக்களால் அதிகம் தேடப்பட்ட விளையாட்டுகளின் பட்டியலில் ஐபிஎல் முதலிடத்திலும், டி20 உலகக் கோப்பை இரண்டாவது இடத்திலும், ஒலிம்பிக்ஸ், ப்ரோ கபடி லீக், இந்தியன் சூப்பர் லீக், மகளிர் ப்ரீமியர் லீக், கோபா அமெரிக்கா, துலீப் கோப்பை, யுஇஎப்ஏ கோப்பை, யு-19 உலகக் கோப்பை ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
அதிகம் தேடப்பட்ட சுற்றுலாத் தலங்கள்
சுற்றுலா செல்வதற்காக அதிகம் தேடப்பட்ட இடங்களுக்கான பட்டியலில், அசர்பைஜான் முதலிடத்திலும்,பாலி இரண்டாவது இடத்திலும், மனாலி, கசகஸ்தான், ஜெய்ப்பூர், ஜார்ஜியா, மலேசியா, அயோத்தியா, காஷ்மீர், தெற்கு கோவா ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.
அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள்
அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களுக்கான பட்டியலில், ஸ்ட்ரீட் 2 முதலிடத்திலும், கல்கி 2898ஏடி, 12வது பெயில், லபட்டா லேடீஸ், ஹனுமன், மகாராஜா, மஞ்சுமல் பாய்ஸ், தி கோட், சாலார், ஆவேஷம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.
அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள்
அதிகம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பட்டியலில், "என்ன பார்க்க வேண்டும்?" (What to Watch?) என்ற கேள்வியை 7.5 லட்சத்துக்கும் மேற்பட்டோரும், இதற்கு அடுத்தப்படியாக "எனது ஐபி/முகவரி என்ன?" (What is My IP/Address?) என்ற கேள்வியை 3.6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கேட்டுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக, எனது ரீஃபண்ட் எங்கே (where's my refund?), ஒரு கப்பில் எத்தனை அவுன்ஸ் உள்ளது? (How many ounces in a cup?), உன் அம்மாவை நான் எப்படி சந்தித்தேன் தெரியுமா? (How I met your mother?), ஐ மேக்கில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி?(How to screenshot on mac?), நான் எங்கே இருக்கிறேன்?(where am i?), விரைவாக உடல் எடையை குறைப்பது எப்படி ?(How to lose weight fast?), உங்களுக்கு பிடித்துள்ளதா?(How you like that?) போன்ற கேள்விகள் அதிகயளவில் கேட்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.