
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் குறைவான மதிப்பில் இருந்த சில குறிப்பிட்ட பங்குகள், ஓராண்டு காலத்தில் அதிகப்படியான வளர்ச்சியைக் கண்டுள்ளன.
கடந்தாண்டில் குறிப்பிட்ட பங்குகளை வாங்கியிருந்தால், தற்போது நல்ல லாபம் ஈட்டியிருக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறும் சில நிறுவனப் பங்குகள்:
ஸ்ரீ அதிகரி பிரதர்ஸ் டெலிவிஷன் நெட்வொர்க் (Sri Adhikari Brothers Television Network) என்ற ஊடகத்துறை நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு, கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ரூ. 2.4-ஆக இருந்தது; ஆனால், தற்போது ரூ. 2,013-ஆக உயர்ந்தது. கடந்தாண்டில் இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு வெறும் ரூ. 8 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ. 5,465 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தில் கடந்தாண்டு ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால், தற்போது அதன் மதிப்பு ரூ. 9 கோடியாக பன்மடங்காகியிருக்கும்.
மின்சார உபகரணங்களை தயாரிக்கும் மார்ஷன்ஸ் (Marsons) நிறுவனத்தின் பங்கு மதிப்பு, ஓராண்டு காலத்தில் 2763 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்தாண்டு வெறும் ரூ. 8-ஆக இருந்த ஒரு பங்கின் மதிப்பு, தற்போது ரூ. 241 என்ற அளவில் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன்!
பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் (Bharat Global Developers) நிறுவனம், ஓராண்டு காலத்தில் 2041 சதவிகித லாபத்தை பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு, கடந்தாண்டு இதே காலகட்டத்தில் வெறும் ரூ. 42-ஆக இருந்து தற்போது ரூ. 1073 என உயர்ந்துள்ளது.
எராயா லைஃப் ஸ்பேசஸ் (Eraaya Lifespaces) நிறுவனத்தின் பங்கு மதிப்பு, ஓராண்டு காலத்தில் 1935 சதவிகிதம் லாபம் பெற்றுள்ளது. கடந்தாண்டு இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு ரூ. 8-ஆக இருந்து, தற்போது ரூ. 179 என உயர்ந்துள்ளது.
வேண்டேஜ் நாலேஜ் அகாதமி (Vantage Knowledge Academy) என்ற கல்வி துறை நிறுவனத்தின் பங்கு மதிப்பு, ஓராண்டு காலத்தில் 1823 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு ரூ. 11 இருந்த நிலையில், தற்போது ரூ. 222 என உயர்ந்துள்ளது.
எந்தவொரு முதலீட்டு முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு சான்றளிக்கப்பட்ட நிபுணர்களுடன் சரிபார்க்குமாறு பொருளாதாரவியலாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.