கணினி வழியில் ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும்: மத்திய அரசு

ஃபிளிப்கார்ட், அமேசான் மூலம் பாடப் புத்தகங்களை விற்க ஒப்பந்தம்: மத்திய அரசு
கணினி வழியில் ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும்: மத்திய அரசு
Published on
Updated on
1 min read

என்சிஇஆர்டி பாடப் புத்தகங்கள் ஃபிளிப்கார்ட், அமேசான் தளங்கள் மூலம் ஆன்லைனில் விற்பனை செய்யப்படவுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று(டிச. 17) தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு ‘ஜேஇஇ’ கணினி முறையில் நடத்தப்படும். அதேபோல நீட் தேர்வையும் கணினி முறையில் நடத்த சுகாதாரத் துறை கோரிக்கையின் அடிப்படையில் கல்வித் துறை உரிய வழிவகை செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூரியிருப்பதாவது: “மாணவர்களின் நலன் குறித்தும் தேர்வு குறித்த அழுத்தத்திலிருந்து விடுவித்தல் குறித்தும் உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

தேர்வுக்கான பயிற்சி மையங்கள் இதற்கான காரணியாக உள்ளது. இத்தகைய நிலையில், அவை வணிகமயமாக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்யும்.

பல்கலைக்கழக மானியக் குழு - சியூஇடி(க்யூட்) தேர்வுகளை எளிமையாக்குவது குறித்து அரசு செயலாற்றி வருகிறது.

நுழைவுத் தேர்வுகளைப் பொருத்தவரையில், தொழில்நுட்பம் சார்ந்து தேர்வுகளை நடத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கணினி வழியில் நுழைவுத் தேர்வுகள் நடத்தவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பள்ளியிலேயே மாணவர்களை நுழைவுத் தேர்வுகளுக்கு ஏற்றவாறு தயார் செய்ய வேண்டும். உளவியல் நீதியான தேர்வு முறைகள் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு அவை மேம்படுத்தப்பட வேண்டும்.

சர்வதேச பங்களிப்புடன் ஒத்துழைப்புடனும் இந்திய கல்வி முறையை சர்வதேச தரத்துக்கு எடுத்துச் செல்வது குறித்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக 3 பேர் கொண்ட உயரதிகார செயல் குழு ஒன்று பேராசிரியர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் அமைக்கப்பட்ட இந்த குழு, கடந்த அக். 21-இல் அரசிடம் அதன் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் 101 பரிசீலனைகளை தெரிவித்துள்ளது.

அடுத்த கல்வியாண்டு முதல், தேசிய தேர்வு முகமை(எண்டிஏ) உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளில் மட்டுமே கவனம் செலுத்தும். ஆன்லைன் வழியில் நுழைவுத் தேர்வுகள் நடத்துவதற்கு சைபர் குற்றங்கள் மிகப்பெரிய சவாலாக உள்ளன. இந்த விவகாரத்தில் கவனமுடன் கையாள வேண்டியுள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு ‘ஜேஇஇ’ கணினி முறையில் நடத்தப்படும். அதேபோல நீட் தேர்வையும் கணினி முறையில் நடத்த சுகாதாரத் துறை கோரிக்கையின் அடிப்படையில் கல்வித் துறை உரிய வழிவகை செய்யும்.

அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர்கள் மீது நிதிச்சுமை ஏதும் இருக்காது. கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய குழு(என்சிஇஆர்டி), 15 கோடி தரமான புத்தகங்களை விற்பனைக்காக வெளியிடும். இதற்காக என்சிஇஆர்டி அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் ஆகிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் மேற்கண்ட ஆன்லைன் தளங்களில் பாடப்புத்தகங்கள் அவற்றின்எம்ஆர்பி விலையில் விற்கப்படும்” என்ரு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com