டாடா இரும்புச் சுரங்கத்தில் 'பெண்கள் ஷிஃப்ட்'! இந்தியாவில் முதல்முறை!!

ஜார்க்கண்டில் உள்ள டாடா இரும்புச் சுரங்கத்தில் ஒரு ஷிஃப்ட் முழுவதும் பெண்கள் பணிபுரிகின்றனர்.
டாடா இரும்புச் சுரங்கத்தில் 'பெண்கள் ஷிஃப்ட்'! இந்தியாவில் முதல்முறை!!
Published on
Updated on
1 min read

ஜார்க்கண்டில் உள்ள டாடா இரும்புச் சுரங்கத்தில் ஒரு ஷிஃப்ட் முழுவதும் பெண்கள் பணிபுரிகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டம் நோமுண்டி நகரத்தில் டாடா நிறுவனத்தின் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த இரும்புச் சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய முயற்சியாக ஒரு ஷிஃப்ட் முழுவதும் பெண்கள் பணிபுரிகின்றனர்.

கனரக இயந்திரங்கள் முதல் ஷிஃப்ட் கண்காணிப்பு வரை அனைத்து சுரங்க நடவடிக்கைகளிலும் பெண் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சுரங்கப் பாதுகாப்பு துணை இயக்குநர் ஜெனரல் ஷியாம் சுந்தர் பிரசாத் கடந்த திங்களன்று(டிச. 16) இதனை தொடக்கிவைத்தார்.

2019 ஆம் ஆண்டில் சுரங்கத்தில் அனைத்துப் பணிகளிலும் பெண்களை பணியமர்த்த முடிவு செய்த டாடா நிறுவனத்தின் முடிவைப் பாராட்டினார்.

'இந்தியாவில் இது முதல்முயற்சி, பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் தொழில்களில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும், சமமான வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது' என்றார்.

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் துணைத் தலைவர் சுந்தர ராமம் கூறுகையில், 'சுரங்கத்தில் பெண்கள் பணிபுரியும் இந்த மாற்றம், நிறுவனத்திற்கு மட்டுமின்றி இந்திய சுரங்கத் துறைக்கும் ஒரு முக்கிய சாதனையாக இருக்கும். பெண்களின் திறனைக் குறைத்து மதிப்பிடும் கொள்கைகளை உடைப்பதற்கு இது எடுத்துக்காட்டாகும். பன்முகத்தன்மை, புதுமை மற்றும் எங்கள் நம்பிக்கையின் பிரதிபலிப்பாகவும் இது உள்ளது. மேலும் சுரங்கத் துறையில் இது பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும்' என்றார்.

முன்னதாக 2019 ஆம் ஆண்டு 'சுரங்கத்தில் பெண்கள்' என இந்தியாவில் முதல்முறையாக சுரங்கத்தில் பெண்களை பணியமர்த்தியது டாடா ஸ்டீல் நிறுவனம். அதன்படி, அனைத்து ஷிஃப்டுகளிலும் பெண்களை ஈடுபடுத்தும் இந்தியாவின் முதல் நிறுவனமாக இருந்து வருகிறது.

தொடர்ந்து, சுரங்கத்திற்கு அருகில் வசிக்கும் பெண்களுக்கு பயிற்சி வழங்கி, போதுமான உடல் தகுதியுள்ள பெண்களை அனைத்து வேலைகளிலும் பணியமர்த்துகின்றனர். இந்த சுரங்கத்தில் இந்தாண்டு 9 திருநங்கைகள் பணியமர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com