சபரிமலையில் நேற்று ஒரே நாளில் அதிக பக்தர்கள் தரிசனம்!

சபரிமலையில் இந்த ஆண்டு நேற்று(டிச.19) ஒரேநாளில் அதிக பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் நேற்று(கோப்புப்படம்)
சபரிமலை ஐயப்பன் கோயில் நேற்று(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

சபரிமலையில் இந்த ஆண்டு நேற்று(டிச.19) ஒரேநாளில் அதிக பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பா் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தென் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனா்.

இரண்டு மாதங்கள் நீடிக்கும் இந்த யாத்திரை, 2025 ஜனவரி 14-ஆம் தேதி மகரவிளக்கு தரிசனத்துடன் நிறைவடையும். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் சபரிமலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சபரிமலையில் இந்த ஆண்டு நேற்று(டிச.19) ஒரேநாளில் அதிக பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதன்படி டிச.19ஆம் தேதி 96,007 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

உடனடி முன்பதிவு மூலம் 22,121 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அதில் புல்மேடு வழியாக 3,016, எருமேலி வழியாக 504 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

கோவையில் அண்ணாமலை, பாஜகவினர் கைது!

பக்தர்கள் கூட்டம் அதிகரித்தாலும் புதிதாக எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்று சன்னிதான சிறப்பு அதிகாரி கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார்.

தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், வரும் நாட்களில் சன்னிதானத்தில் குழந்தைகள் உட்பட அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 26-ம் தேதி நடைபெறும் மண்டல பூஜையை முன்னிட்டு, ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என மதிப்பிடப்பட்டடு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சிறப்பு அதிகாரி மேலும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com